• Sep 19 2024

பொது போக்குவரத்து தொடர்பில் அரசின் விசேட அறிவித்தல்!

crownson / Dec 24th 2022, 9:46 am
image

Advertisement

பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல் படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து வெளியூர்களுக்கு மக்களை ஏற்றிச் செல்வதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் பெட்டா மற்றும் மகும்புர பேருந்து நிலையங்களில் இருந்து 40 கூடுதல் பேருந்துகள் புறப்படும் என இலங்கை போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து பதுளைக்கு விசேட புகையிரதமொன்றை, இலங்கை ரயில்வே சேவை ஈடுபடுத்தியுள்ளது.

முக்கிய நகரங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களை ஏற்றிச் செல்வதற்காக அடுத்த வாரம் கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்களை ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று குறித்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொது போக்குவரத்து தொடர்பில் அரசின் விசேட அறிவித்தல் பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அமுல் படுத்தப்பட்டுள்ளன.கொழும்பில் இருந்து வெளியூர்களுக்கு மக்களை ஏற்றிச் செல்வதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் பெட்டா மற்றும் மகும்புர பேருந்து நிலையங்களில் இருந்து 40 கூடுதல் பேருந்துகள் புறப்படும் என இலங்கை போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து பதுளைக்கு விசேட புகையிரதமொன்றை, இலங்கை ரயில்வே சேவை ஈடுபடுத்தியுள்ளது.முக்கிய நகரங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களை ஏற்றிச் செல்வதற்காக அடுத்த வாரம் கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்களை ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று குறித்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement