• Nov 23 2024

வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை...!

Sharmi / Mar 5th 2024, 3:43 pm
image

வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்றையதினம்(05) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போது, வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டது.

இந்நிலையில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்ன, வடக்கு மாகாண ஆளுநரிடம் இதன்போது உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை. வடமாகாணத்தில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் கவனம் செலுத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்றையதினம்(05) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில் ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டது.இந்நிலையில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்ன, வடக்கு மாகாண ஆளுநரிடம் இதன்போது உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement