• Nov 22 2024

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளவர் ஆட்சியை கைப்பற்றுவதற்கு திட்டம் - கோவிந்தன் கருணாகரம்! Samugammedia

Tamil nila / Dec 18th 2023, 7:15 am
image

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தற்போதைய திட்ட தொடங்கியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

சந்திரோதயம் கலை இலக்கிய பெரு மன்றத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் "மலையகம் 200" எனும் மலையக மக்களின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வு நேற்று  மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதன்போது  கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம்,.

மலையக மக்கள் அந்நிய செலாவணியை இட்டுத் தரும் மக்களாக இருந்தாலும்  நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர் மொட்டுவின் மகாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியை காணவில்லை கட்சியின் தேசிய அமைப்பாளர் அது பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தற்போதைய திட்ட தொடங்கியுள்ளனர்.

நமது மாவட்டத்தின் மேய்ச்சல் தரை சம்பந்தமான பிரச்சனைக்கு ஜனாதிபதி சாதகமான பதில் வழங்குகின்ற போதிலும் அரச அதிகாரிகள் அதற்கு செவி சாய்ப்பதில்லை. இன்று நீதிமன்ற தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அப்பிரதேசத்துக்கு செல்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுடன் வடக்கு கிழக்கு மக்கள் என்றும் கைகோர்த்து இருப்போம் - என தெரிவித்தார்.


நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளவர் ஆட்சியை கைப்பற்றுவதற்கு திட்டம் - கோவிந்தன் கருணாகரம் Samugammedia நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தற்போதைய திட்ட தொடங்கியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.சந்திரோதயம் கலை இலக்கிய பெரு மன்றத்தினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் "மலையகம் 200" எனும் மலையக மக்களின் பெருமையை பறைசாற்றும் நிகழ்வு நேற்று  மட்டக்களப்பில் இடம்பெற்றது.இதன்போது  கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம்,.மலையக மக்கள் அந்நிய செலாவணியை இட்டுத் தரும் மக்களாக இருந்தாலும்  நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர் மொட்டுவின் மகாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியை காணவில்லை கட்சியின் தேசிய அமைப்பாளர் அது பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தற்போதைய திட்ட தொடங்கியுள்ளனர்.நமது மாவட்டத்தின் மேய்ச்சல் தரை சம்பந்தமான பிரச்சனைக்கு ஜனாதிபதி சாதகமான பதில் வழங்குகின்ற போதிலும் அரச அதிகாரிகள் அதற்கு செவி சாய்ப்பதில்லை. இன்று நீதிமன்ற தீர்ப்பை கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட அப்பிரதேசத்துக்கு செல்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையக மக்களுடன் வடக்கு கிழக்கு மக்கள் என்றும் கைகோர்த்து இருப்போம் - என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement