இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளில் வரி அறவீடு செய்ய தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தத் துறைகளில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் வருமானம் குறித்து உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் தெளிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வரி செலுத்துவதைத் தவிர்க்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.
மேலும் 14 துறைகளுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம் - வெளியானது முக்கிய அறிவிப்பு இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளில் வரி அறவீடு செய்ய தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.அந்தத் துறைகளில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் வருமானம் குறித்து உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் தெளிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வரி செலுத்துவதைத் தவிர்க்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.