• Jan 19 2025

கப்பல்களை பரிசோதித்து விடுவிக்க முடியாமல் திணறும் அரசு - பாரியளவில் நட்டம்

Chithra / Jan 17th 2025, 9:13 am
image


இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை பரிசோதனை செய்து விடுவிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.

அந்த விடயத்துக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் துறைமுக நிலைமைய கண்காணிக்க வந்தபோது, கொழும்பு துறைமுகத்துக்கு வந்த 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

ஆனால் 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது.

இதேவேளை சுமார் 17 கொள்கலன்கள் துறைமுகத்துக்குள் இறுகி இருப்பதாக தரவுகள் வெளிவருகின்றன.

துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் பொருட்களை கொண்டுசெல்ல வந்திருக்கும் பார ஊர்திகள் பல நாட்களாக இவ்வாறு வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறன.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி துறைமுக அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்கள அதிகாரிகளை சந்தித்து, துறைமுக ஊழியர்கள் 24 மணிநேரம் வேலை செய்து பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் கலந்துரையாடல் இடம்பெற்று ஒருவார காலம் கடந்துள்ள நிவையில் இன்னும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது என கூறியுள்ளார்.   

கப்பல்களை பரிசோதித்து விடுவிக்க முடியாமல் திணறும் அரசு - பாரியளவில் நட்டம் இலங்கைக்கு வருகை தந்த 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை பரிசோதனை செய்து விடுவிக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது.அந்த விடயத்துக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் துறைமுக நிலைமைய கண்காணிக்க வந்தபோது, கொழும்பு துறைமுகத்துக்கு வந்த 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.ஆனால் 30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம் நாட்டுக்கு பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது.இதேவேளை சுமார் 17 கொள்கலன்கள் துறைமுகத்துக்குள் இறுகி இருப்பதாக தரவுகள் வெளிவருகின்றன.துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் பொருட்களை கொண்டுசெல்ல வந்திருக்கும் பார ஊர்திகள் பல நாட்களாக இவ்வாறு வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறன.இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி துறைமுக அதிகாரிகள் மற்றும் சுங்க திணைக்கள அதிகாரிகளை சந்தித்து, துறைமுக ஊழியர்கள் 24 மணிநேரம் வேலை செய்து பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.ஆனால் கலந்துரையாடல் இடம்பெற்று ஒருவார காலம் கடந்துள்ள நிவையில் இன்னும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது என கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement