• Dec 09 2024

நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...! மட்டு விவசாயிகள் கோரிக்கை...!samugammedia

Sharmi / Feb 2nd 2024, 10:10 am
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை யெனவும் நெலுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட விவசாயம் தொடர்பாகவும், பெரும்போக விவசாயத்தின் முன்னேற்றம், மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட  விவசாய நிலங்களுக்கான காப்புறுதி நஸ்ட ஈடு வழங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் 2024ம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச்செய்கைக்காண கால அட்டவனையை தயாரிக்கப்பட்டது.

மேலும், கரடியனாறு விவசாய ஆராய்ச்சி மையத்திற்கான விவசாய ஆராய்ச்சி அதிகாரியின் நியமனம் தொடர்பாக  விவசாயிகளினால் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பட்டதுடன், நெல்லுக்கான விலை நிர்ணயம் செய்வதனால் தமது நெல்லினை நியாயமான விலையில் விற்பனை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,  மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மத்திய மாகாண நீர்பாசன திணைக்களங்களுக்குரிய குளங்கள் மற்றும் மகாவலி உட்பட பல்வேறு நீர்பாசன திட்டத்தின் உதவியுடன் இம்முறை சுமார் 90ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையினை முன்னெடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுகளிhல் 80ஆயிரம் ஏக்கரே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் மேலும் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்கை மேற்கொள்ளும்  நிலைமை காணப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிஞ்சியுள்ளதை அறுவடைசெய்துவருகின்றனர்.ஆனால் இதுவரையில் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அத்துடன் இதுவரையில் நெல்லுக்கான விலைகளும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

எனவே, அரசாங்கம் நெல்லுக்கான விலையினை நிர்ணயம் செய்து நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.தனியார் நெல்லை கொள்வனவு செய்யும் நிலையேற்பட்டால் விவசாயிகளிடமிருந்து அடிமட்ட விலைகளே வழங்கப்படும்.எனவே அரசாங்க அதிபர் இதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் தான் ஜனாதிபதியின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டு விவசாயிகள் கோரிக்கை.samugammedia மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் நெல்லுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படவில்லை யெனவும் நெலுக்கான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட விவசாயம் தொடர்பாகவும், பெரும்போக விவசாயத்தின் முன்னேற்றம், மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட  விவசாய நிலங்களுக்கான காப்புறுதி நஸ்ட ஈடு வழங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் 2024ம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச்செய்கைக்காண கால அட்டவனையை தயாரிக்கப்பட்டது.மேலும், கரடியனாறு விவசாய ஆராய்ச்சி மையத்திற்கான விவசாய ஆராய்ச்சி அதிகாரியின் நியமனம் தொடர்பாக  விவசாயிகளினால் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பட்டதுடன், நெல்லுக்கான விலை நிர்ணயம் செய்வதனால் தமது நெல்லினை நியாயமான விலையில் விற்பனை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த்,  மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது மத்திய மாகாண நீர்பாசன திணைக்களங்களுக்குரிய குளங்கள் மற்றும் மகாவலி உட்பட பல்வேறு நீர்பாசன திட்டத்தின் உதவியுடன் இம்முறை சுமார் 90ஆயிரம் ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையினை முன்னெடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.கடந்த ஆண்டுகளிhல் 80ஆயிரம் ஏக்கரே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் முயற்சியினால் மேலும் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்கை மேற்கொள்ளும்  நிலைமை காணப்படுவதாக மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மிஞ்சியுள்ளதை அறுவடைசெய்துவருகின்றனர்.ஆனால் இதுவரையில் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அத்துடன் இதுவரையில் நெல்லுக்கான விலைகளும் நிர்ணயம் செய்யப்படவில்லை.எனவே, அரசாங்கம் நெல்லுக்கான விலையினை நிர்ணயம் செய்து நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.தனியார் நெல்லை கொள்வனவு செய்யும் நிலையேற்பட்டால் விவசாயிகளிடமிருந்து அடிமட்ட விலைகளே வழங்கப்படும்.எனவே அரசாங்க அதிபர் இதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பில் தான் ஜனாதிபதியின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement