சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த பகுதி பணம் வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பணம் கிடைத்தவுடன் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வரி குறைப்பு ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த பகுதி பணம் வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பணம் கிடைத்தவுடன் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வரி குறைப்பு ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.இதேவேளை, பொதுத் தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.