• Dec 13 2024

பிரபல நடிகரின் திடீர் மரணம்...! மூடிய சிலநொடியில் திறந்த கண்கள்...! இறந்தும் வாழும் டானியல்...!

Sharmi / Mar 30th 2024, 1:07 pm
image

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான டானியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்றிரவு(29) உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற நெடுந்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய டானியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பிகில்,  பொல்லாதவன், பைரவா, வட சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் திருவாண்மை ஊரிலுள்ள அவரது இல்லத்தில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் உடனடியாக அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, டானியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்வதற்கான  அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்கு விசேட மருத்துவர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கண் தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டானியல் பாலாஜியின்,  இந்த திடீர் மரணம் ஒட்டு மொத்த திரையுலகினரையும்,  ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும், இவரது உடல் தற்போது, அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



பிரபல நடிகரின் திடீர் மரணம். மூடிய சிலநொடியில் திறந்த கண்கள். இறந்தும் வாழும் டானியல். தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான டானியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்றிரவு(29) உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற நெடுந்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிய டானியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பிகில்,  பொல்லாதவன், பைரவா, வட சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் திருவாண்மை ஊரிலுள்ள அவரது இல்லத்தில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இந்நிலையில் உடனடியாக அவரை உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதேவேளை, டானியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்வதற்கான  அறுவை சிகிச்சையினை மேற்கொள்வதற்கு விசேட மருத்துவர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கண் தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.டானியல் பாலாஜியின்,  இந்த திடீர் மரணம் ஒட்டு மொத்த திரையுலகினரையும்,  ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இவரது உடல் தற்போது, அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement