• Apr 02 2025

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதில் விரைவில் மாற்றம் - அரசு எடுத்த நடவடிக்கை!

Chithra / Dec 10th 2024, 9:10 am
image

 

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, தற்போது 62 வயதாகும் வைத்தியர் ஒருவரின் ஓய்வு வயது மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படும்.

இதேவேளை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதில் விரைவில் மாற்றம் - அரசு எடுத்த நடவடிக்கை  வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அதன்படி, தற்போது 62 வயதாகும் வைத்தியர் ஒருவரின் ஓய்வு வயது மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படும்.இதேவேளை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement