இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கான பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது என்று அவர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும்.
முன்னதாக, இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான அடிகளைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை தமது அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இந்தியா உட்பட 39 நாட்டு மக்களுக்கு இலவச விசா: விரைவில் அரசு வெளியிடவுள்ள வர்த்தமானி இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கான பயணத்திற்குப் பின்னர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது என்று அவர் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன என்றும் ஹேரத் தெரிவித்துள்ளார்.இலங்கையின் முதல் முன்னுரிமை அதன் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான அதன் கடன் தொகுப்பை மறுசீரமைப்பது மற்றும் புதிய சுற்றுலா வரவுகளை ஊக்குவிப்பதாகும்.முன்னதாக, இலங்கை சுற்றுலாத் துறையில் மூன்று தொடர்ச்சியான அடிகளைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை தமது அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.