• Nov 24 2024

தீர்வு இல்லையேல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் - கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை

Chithra / Jun 16th 2024, 8:11 am
image

 

எதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க இதனை அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி காரியாலயத்தில் தங்களது பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

சம்பளம், கொடுப்பனவு போன்றவற்றை மறுசீரமைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ளனர்.

நபர் ஒருவரின் மரணத்தின் போது வழங்கப்படும் ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கிராம சேவை சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தீர்வு இல்லையேல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் - கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை  எதிர்வரும் 24 ஆம் திகதி தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க இதனை அறிவித்துள்ளார்.எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி காரியாலயத்தில் தங்களது பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தற்பொழுது சட்டப்படி வேலை என்ற தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.சம்பளம், கொடுப்பனவு போன்றவற்றை மறுசீரமைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ளனர்.நபர் ஒருவரின் மரணத்தின் போது வழங்கப்படும் ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் கிராம சேவை சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement