மலையக மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், இந்திய தமிழ்த் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கில்மிஷா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
குறித்த நிகழ்வை சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பில் நடைபெறவுள்ள இமானின் “கச்சேரி ஆரம்பம்” இசை நிகழ்ச்சியில் கில்மிஷாவும் கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ் இந்துக்கல்லுாரி விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு நிதி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் கொழும்பு கிளை ஏற்பாட்டில் கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் இன்று (30)தென்னிந்திய இசையமைப்பாளர் டி.இமான் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அடுத்தடுத்து கிடைக்கும் அமோக வாய்ப்பு ஒரே நிகழ்வில் மேடையேறவுள்ள கில்மிஷாவும் அசானியும் மலையக மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வில், இந்திய தமிழ்த் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கில்மிஷா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.குறித்த நிகழ்வை சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.இதேவேளை கொழும்பில் நடைபெறவுள்ள இமானின் “கச்சேரி ஆரம்பம்” இசை நிகழ்ச்சியில் கில்மிஷாவும் கலந்துகொள்ளவுள்ளார்.யாழ் இந்துக்கல்லுாரி விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு நிதி சேகரிப்பதற்காக யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் கொழும்பு கிளை ஏற்பாட்டில் கொழும்பில் சுகததாச உள்ளக அரங்கில் இன்று (30)தென்னிந்திய இசையமைப்பாளர் டி.இமான் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.