• Jun 26 2024

கொக்குத் தொடுவாயில் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்!!!Samugammedia

Tamil nila / Dec 24th 2023, 7:12 pm
image

Advertisement

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (23.12.2023) முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களுக்குச் சூழல் அறிவைப்பு கட்டி அவர்களுக்குச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது.



இதன் தொடர்ச்சியாகவே கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் க.நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடா - உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தாபகத் தலைவருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.



தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், விவசாயப் போதனாசிரியர் த.துளசிராம் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றியிருந்தார்கள். 

நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பால் சூழல் விழிப்புணர்வுக் குறிப்பேடுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கொக்குத் தொடுவாயில் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்Samugammedia தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (23.12.2023) முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.மாணவர்களுக்குச் சூழல் அறிவைப்பு கட்டி அவர்களுக்குச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது.இதன் தொடர்ச்சியாகவே கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் க.நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடா - உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தாபகத் தலைவருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், விவசாயப் போதனாசிரியர் த.துளசிராம் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றியிருந்தார்கள். நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பால் சூழல் விழிப்புணர்வுக் குறிப்பேடுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement