• May 20 2024

பச்சை இனவாதி; அடிமுட்டாள் - சபையில் குறுக்கிட்ட சரத்வீரகேரவிற்கு பதிலடி கொடுத்த கஜேந்திரன்

Chithra / Feb 9th 2023, 3:25 pm
image

Advertisement

சரத்வீரசேகர போன்ற அடிமுட்டாள்களின் அறிவுரைகளை கேட்டதாலேயே கோட்டாபய ராஜபக்ச சொந்த இன மக்களாளேயே அடித்து விரட்டப்பட்டிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதமானது சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக நடைபெற்று வருகின்றது.

இதில் கஜேந்திரன் உரையாற்றும் போது சரத்வீரசேர குறிக்கிட்டு கருத்து தெரிவித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இதன்போதே கஜேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சரத்வீரசேகர போன்ற பச்சை இனவாதிகளை துரத்திவிட்டு முற்போக்காக சிந்திக்ககூடியவர்களை தெரிவு செய்யுமாறு அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

சரத்வீரசேகரவின் ஆலோசனையை கேட்டபடியாலே மகிந்த மற்றும் கோட்டா ஆகியோர் இன்று தெருவுக்கு வந்துள்ளதை போன்று ஏனையவர்களும் தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்றும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்க நாட்டார் கதைகளில் வருகின்ற மாதன முத்தாவை போன்று சரத்வீரசேகர அடிமுட்டாள் என்றும் கஜேந்திரன் காட்டமாக பதில் வழங்கியிருந்தார்.

பச்சை இனவாதி; அடிமுட்டாள் - சபையில் குறுக்கிட்ட சரத்வீரகேரவிற்கு பதிலடி கொடுத்த கஜேந்திரன் சரத்வீரசேகர போன்ற அடிமுட்டாள்களின் அறிவுரைகளை கேட்டதாலேயே கோட்டாபய ராஜபக்ச சொந்த இன மக்களாளேயே அடித்து விரட்டப்பட்டிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதமானது சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக நடைபெற்று வருகின்றது.இதில் கஜேந்திரன் உரையாற்றும் போது சரத்வீரசேர குறிக்கிட்டு கருத்து தெரிவித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. இதன்போதே கஜேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.சரத்வீரசேகர போன்ற பச்சை இனவாதிகளை துரத்திவிட்டு முற்போக்காக சிந்திக்ககூடியவர்களை தெரிவு செய்யுமாறு அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.சரத்வீரசேகரவின் ஆலோசனையை கேட்டபடியாலே மகிந்த மற்றும் கோட்டா ஆகியோர் இன்று தெருவுக்கு வந்துள்ளதை போன்று ஏனையவர்களும் தெருவிற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்றும் கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.சிங்க நாட்டார் கதைகளில் வருகின்ற மாதன முத்தாவை போன்று சரத்வீரசேகர அடிமுட்டாள் என்றும் கஜேந்திரன் காட்டமாக பதில் வழங்கியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement