• Dec 04 2024

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு! samugammedia

Tamil nila / Dec 6th 2023, 7:30 pm
image

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்று (06) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள 11 மாடி கட்டிடத்தின் 5 வது மாடியில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு அதன் பாதுகாப்பு அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸாரின் விசாரணையில் அது கைக்குண்டு என தெரியவந்துள்ளது.

தெஹிவளை பொலிஸ் நிலையம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் கட்டிடம் ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு samugammedia தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்று (06) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள 11 மாடி கட்டிடத்தின் 5 வது மாடியில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு அதன் பாதுகாப்பு அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பொலிஸாரின் விசாரணையில் அது கைக்குண்டு என தெரியவந்துள்ளது.தெஹிவளை பொலிஸ் நிலையம் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement