கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான நபரான ' குடு ரொஷான் ', அவரது சகோதரன் மற்றும் மேலும் சிலர் வரக்காபொல போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசாரால் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை காரணமாக இவர்கள் நுவரெலியா பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில், போலீசாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டதாக எண்ணி கொழும்பிற்கு சென்றுகொண்டிருந்த போது, காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 875 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 10 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் இரு சிறுமியர் உட்பட்ட 8 குழந்தைகளில் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 4 ஆண்களும் 3 பெண்களும் தற்போது மட்டக்குளி பொலிஸாரால் தேடப்பட்டு வரும் போதைப்பொருள் வியாபாரிகள் என்பதோடு இவர்களில் 7 பேர் மீது இதற்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் பதுங்கிய 'குடு ரொஷான்' கூண்டோடு கைது.samugammedia கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பிரதான நபரான ' குடு ரொஷான் ', அவரது சகோதரன் மற்றும் மேலும் சிலர் வரக்காபொல போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரால் ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை காரணமாக இவர்கள் நுவரெலியா பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில், போலீசாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டதாக எண்ணி கொழும்பிற்கு சென்றுகொண்டிருந்த போது, காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 875 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 10 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் இரு சிறுமியர் உட்பட்ட 8 குழந்தைகளில் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 4 ஆண்களும் 3 பெண்களும் தற்போது மட்டக்குளி பொலிஸாரால் தேடப்பட்டு வரும் போதைப்பொருள் வியாபாரிகள் என்பதோடு இவர்களில் 7 பேர் மீது இதற்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு ஏனையோர் தடுத்து வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.