• Jan 11 2025

ஹேக் செய்யப்பட்ட அரச அச்சகத்தின் இணையத்தளம் வழமைக்கு..!

Sharmi / Jan 2nd 2025, 11:44 am
image

அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசை ஆகியன சில தினங்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவை மீளமைக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இன்றைய(02) தினத்திற்குள் இவற்றை வழமைக்கு கொண்டு வர முடியும் என அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சைபர் தாக்குதல்களை எந்த தரப்பினர் நடத்தினர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, பொலிஸ் சமூக வலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.




ஹேக் செய்யப்பட்ட அரச அச்சகத்தின் இணையத்தளம் வழமைக்கு. அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் அலைவரிசை ஆகியன சில தினங்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவை மீளமைக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய(02) தினத்திற்குள் இவற்றை வழமைக்கு கொண்டு வர முடியும் என அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், குறித்த சைபர் தாக்குதல்களை எந்த தரப்பினர் நடத்தினர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, பொலிஸ் சமூக வலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement