• Nov 18 2024

ஹாட்லியின் மைந்தர்களது 25ம் ஆண்டு நினைவேந்தல் : உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு!

Tharmini / Nov 18th 2024, 9:25 am
image

ஹாட்லியின் மைந்தர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் வடமராட்சி, இன்பர்சிட்டி,

கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர் மற்றும் நண்பர்களால் நேற்று (17) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டது.

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி, கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை

கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி-கந்தர்வன், சிவநாதன்-இரவிசங்கர்,

சுந்தரலிங்கம்-சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன்-பிரதீபன் ஆகிய நான்கு பேரின் 25 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட,

மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம்-குணரட்ணம்,

அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நேற்று (17/11) வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அனுஷ்டிக்கபட்டுள்ளது.

இன்பர்சிட்டி வெள்ளை வான் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உயிரிழந்த மாணவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான உணவுகள், சிற்றுண்டி வகைகள் படையலிடப்பட்டு மாலை அணிவிக்ப்பட்டு மலர்தூவி உணர்வுபூர்வமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த மாணவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஹாட்லிக் கல்லூரி அதிபர் த.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனைத் தொடர்ந்து ஹாட்லிக் கல்லூரி மண்டபத்தில் இன்று (18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஹாட்லியின் மைந்தர்கள் நினைவாக குருதிக்கொடை முகாம் இடம்பெற உள்ளது.





ஹாட்லியின் மைந்தர்களது 25ம் ஆண்டு நினைவேந்தல் : உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு ஹாட்லியின் மைந்தர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் வடமராட்சி, இன்பர்சிட்டி, கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர் மற்றும் நண்பர்களால் நேற்று (17) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபட்டது.கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி, கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளைகடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி-கந்தர்வன், சிவநாதன்-இரவிசங்கர், சுந்தரலிங்கம்-சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன்-பிரதீபன் ஆகிய நான்கு பேரின் 25 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட,மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம்-குணரட்ணம், அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நேற்று (17/11) வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் அனுஷ்டிக்கபட்டுள்ளது.இன்பர்சிட்டி வெள்ளை வான் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உயிரிழந்த மாணவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான உணவுகள், சிற்றுண்டி வகைகள் படையலிடப்பட்டு மாலை அணிவிக்ப்பட்டு மலர்தூவி உணர்வுபூர்வமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இதன்போது உயிரிழந்த மாணவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஹாட்லிக் கல்லூரி அதிபர் த.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஹாட்லிக் கல்லூரி மண்டபத்தில் இன்று (18) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஹாட்லியின் மைந்தர்கள் நினைவாக குருதிக்கொடை முகாம் இடம்பெற உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement