இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எகிப்து ஜனாதிபதி அப்டெல் ஃபற்றா எல்-சிசி (Abdel Fattah el-Sisi)மற்றும் கட்டாரின் ஜனாதிபதி ரமிம் பின் ஹமாட் அல் தானி (Tamim bin Hamad Al Thani) ஆகியோர் கையெழுத்திட்டுள்ள கோரிக்கை கடிதம் விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தோஹாவிலோ அல்லது கைரோவிலோ நடைபெறவுள்ள போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
எனினும் இந்த பேச்சுவார்த்தையில் பங்குகொள்வது குறித்து ஹமாஸ் தரப்பினர் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை.
கடந்த வாரம், ஹமாஸின் தலைவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை, கட்டுப்பாட்டை மீறும் சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் இராஜதந்திர உந்துதல் மூலம் சமாதானத்தைக் கொண்டு வரும் முயற்சி பல தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள்மூலம் எட்டப்படும் ஒப்பந்தத்தின் மூலம், முழு அளவிலான போர் நிறுத்தம் மற்றும் பல பணயக்கைதிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும் என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக் கோரிக்கை இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எகிப்து ஜனாதிபதி அப்டெல் ஃபற்றா எல்-சிசி (Abdel Fattah el-Sisi)மற்றும் கட்டாரின் ஜனாதிபதி ரமிம் பின் ஹமாட் அல் தானி (Tamim bin Hamad Al Thani) ஆகியோர் கையெழுத்திட்டுள்ள கோரிக்கை கடிதம் விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தோஹாவிலோ அல்லது கைரோவிலோ நடைபெறவுள்ள போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனினும் இந்த பேச்சுவார்த்தையில் பங்குகொள்வது குறித்து ஹமாஸ் தரப்பினர் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை. கடந்த வாரம், ஹமாஸின் தலைவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், பிராந்தியத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை, கட்டுப்பாட்டை மீறும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறான பின்னணியில் இராஜதந்திர உந்துதல் மூலம் சமாதானத்தைக் கொண்டு வரும் முயற்சி பல தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள்மூலம் எட்டப்படும் ஒப்பந்தத்தின் மூலம், முழு அளவிலான போர் நிறுத்தம் மற்றும் பல பணயக்கைதிகளை விடுவிக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும் என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.