• May 17 2024

யாழ். மக்களுக்கு கடும் எச்சரிக்கை..! - அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகள்..!

Chithra / Apr 29th 2023, 11:00 am
image

Advertisement

15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்கள் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்  டெங்கு அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. 


இந்நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளில் உள்ளடங்கியுள்ளன.

இதேவேளை, மேல்மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் உட்படுத்தி கடந்த 26ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


யாழ். மக்களுக்கு கடும் எச்சரிக்கை. - அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகள். 15 மாவட்டங்களில் உள்ள 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்கள் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்  டெங்கு அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளில் உள்ளடங்கியுள்ளன.இதேவேளை, மேல்மாகாணத்தின் சகல பிரதேசங்களையும் உட்படுத்தி கடந்த 26ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement