• May 19 2024

எவரின் தாளத்திற்கும் ஆடமாட்டோம் என்றவர்கள் இன்று ரணிலால் ஆட்டுவிக்கப்படுகின்றனர்- கயந்த...! samugammedia

Sharmi / Apr 29th 2023, 11:01 am
image

Advertisement

சர்வதேச நாணயநிதியத்தின் தாளத்திற்கு ஆடாது என அன்று தெரிவித்த ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தினர் இன்று அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

நேற்றைய நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

கோட்டா தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றவுடன் நண்பர்களுக்காக இறக்குமதி வரியை நீக்கியதன் விளைவே இன்று நாடு முதன் முறையாக வங்குரோத்தை அடைந்ததாகவும்,
அத்துடன் பல ஊழல் மோசடிகள் கோட்டா தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றதாகவும் குறிப்பாக சீனி இறக்குமதி, வாகன இறக்குமதி, பசளை இறக்குமதி போன்றவற்றில் பாரிய சோசடிகள் இடம்பெற்றதாவும் இதனால் பல மில்லியன் கணக்கான வருவாயை அரச திறைசேரி இழந்ததாக கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஊழல் கறைபடிந்தவர்களுக்கு இன்று சர்வதேச நாணயநிதியத்தின் கடன் உதவி வாயில் இனிப்பைபோட்டது போன்று இருப்பதாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஜக்கிய மக்கள் சக்தியை பொறுத்த வரையில் இந்த கடன் உதவியை ஒரு நிவாரணமாகவே கருதுவதாக கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டு மக்கள் மிகமோசமான நிலையில் இருப்பதாகவும் மின்சார கட்டணத்தை கூட கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்படுள்ளதாகவும் இதற்கு ஊழல் செய்ய ஆளும் கட்சி உறுப்பினர்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.

எவரின் தாளத்திற்கும் ஆடமாட்டோம் என்றவர்கள் இன்று ரணிலால் ஆட்டுவிக்கப்படுகின்றனர்- கயந்த. samugammedia சர்வதேச நாணயநிதியத்தின் தாளத்திற்கு ஆடாது என அன்று தெரிவித்த ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தினர் இன்று அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியிருந்தார்.நேற்றைய நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.கோட்டா தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றவுடன் நண்பர்களுக்காக இறக்குமதி வரியை நீக்கியதன் விளைவே இன்று நாடு முதன் முறையாக வங்குரோத்தை அடைந்ததாகவும்,அத்துடன் பல ஊழல் மோசடிகள் கோட்டா தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றதாகவும் குறிப்பாக சீனி இறக்குமதி, வாகன இறக்குமதி, பசளை இறக்குமதி போன்றவற்றில் பாரிய சோசடிகள் இடம்பெற்றதாவும் இதனால் பல மில்லியன் கணக்கான வருவாயை அரச திறைசேரி இழந்ததாக கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறு ஊழல் கறைபடிந்தவர்களுக்கு இன்று சர்வதேச நாணயநிதியத்தின் கடன் உதவி வாயில் இனிப்பைபோட்டது போன்று இருப்பதாகவும் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.ஆனால் ஜக்கிய மக்கள் சக்தியை பொறுத்த வரையில் இந்த கடன் உதவியை ஒரு நிவாரணமாகவே கருதுவதாக கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.இன்று நாட்டு மக்கள் மிகமோசமான நிலையில் இருப்பதாகவும் மின்சார கட்டணத்தை கூட கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்படுள்ளதாகவும் இதற்கு ஊழல் செய்ய ஆளும் கட்சி உறுப்பினர்களே பொறுப்பு கூற வேண்டும் என்றும் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement