• Mar 01 2025

யாழ். போதனா வைத்தியசாலையில் வழமைக்குத் திரும்பிய மருத்துவ சேவைகள்

Chithra / Mar 1st 2025, 3:01 pm
image

 

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றையதினம் வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பால் நோயாளர்கள்  பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்றுமுதல் மீண்டும் வைத்தியர்கள் சேவைக்கு திரும்பி உள்ளதை மகிழ்ச்சியுடன் நோயாளர்கள் வரவேற்றுள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த வியாழக்கிழபை முதல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி திரும்பிச் சென்றிருந்தனர்.

இந் நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்தியர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டது.

இதனையடுத்து பொது மக்களின் நலன் கருதி தமது பகிஸ்கரிப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ள போவதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.

இதற்கமைய போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளன. 


யாழ். போதனா வைத்தியசாலையில் வழமைக்குத் திரும்பிய மருத்துவ சேவைகள்  யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றையதினம் வழமைக்குத் திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பால் நோயாளர்கள்  பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்றுமுதல் மீண்டும் வைத்தியர்கள் சேவைக்கு திரும்பி உள்ளதை மகிழ்ச்சியுடன் நோயாளர்கள் வரவேற்றுள்ளனர்.யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த வியாழக்கிழபை முதல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியாமல் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி திரும்பிச் சென்றிருந்தனர்.இந் நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் வைத்தியர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டது.இதனையடுத்து பொது மக்களின் நலன் கருதி தமது பகிஸ்கரிப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ள போவதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்திருந்தது.இதற்கமைய போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement