• Apr 19 2025

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி ரகுராம் இன்று மீண்டும் பதவியேற்பு

Chithra / Jan 30th 2025, 7:01 am
image

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் மீண்டும் இன்று பதவியேற்கவுள்ளதாக பல்கலைக்கழக பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம்நேற்று மாலை நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தனது பதவியிலிருந்து விலகுவதாகப்  அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில், பேராசிரியர் ரகுராம் மீண்டும் இன்று  பதவியேற்கவுள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதவி விலகிய கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக 

விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.


யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி ரகுராம் இன்று மீண்டும் பதவியேற்பு யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் மீண்டும் இன்று பதவியேற்கவுள்ளதாக பல்கலைக்கழக பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம்நேற்று மாலை நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தனது பதவியிலிருந்து விலகுவதாகப்  அறிவித்திருந்தார்.இந்நிலையில் இது குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில், பேராசிரியர் ரகுராம் மீண்டும் இன்று  பதவியேற்கவுள்ளதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பதவி விலகிய கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராமிற்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement