• May 20 2024

யாழ். நகரின் சுற்று சூழல் தொடர்பில் பொதுமக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள கோரிக்கை! samugammedia

Chithra / Apr 24th 2023, 11:44 am
image

Advertisement

யாழ் மாநகர சபையின் சுற்று சுழலில் காணப்படும் அல்லது போடப்படும்  கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு பொது மக்களே சிறப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தொடர்ந்தும் அங்கிருந்து கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

சுற்று சூழல் பாதுகாப்பு சபை ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை, பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் அனைத்தையும் சேர்த்து கடற்கரை சுத்திகரிப்பு பணியானது இன்று காலை குருநகரில் முன்னெடுக்கப்பட்டது. 

அங்கு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார், 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

சுற்று சூழல் பாதுகாப்பு சபை ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை, பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் அனைத்தையும் சேர்த்து கடற்கரை சுத்திகரிப்பு பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்த பகுதி தொடர்ந்து மாசடைந்து வர காரணம் கடல் மூலமாக வருகின்ற அழுக்குகளை காட்டிலும் பொது மக்கள் மூலமே அதிகளவு மாசடைகின்றது. 

இதனை படையினர் மற்றும் போலிசாரின் உதவியுடன் சுத்தம் செய்யலாம். ஆயினும் தொடர்ந்தும் அவர்களை இதில் ஈடுபடுத்துவது என்பது இயலுமான காரியமில்லை. 

ஆகையால் பொது மக்களே குறிப்பாக இப்பகுதி மக்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  செயற்பட வேண்டும்.

மாநகர சபையினுடைய சுற்றுசூழலிலுள்ள கழிவுகளை அகற்றும் செயற்பாட்டினை அதிகரிக்குமாறு ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுகின்றேன். 

அத்துடன் இந்த அழுக்குகளை அகற்றுவதற்குரிய ஆளணி வளம் மற்றும் வாகனங்கள் போன்றன பற்றாக்குறையாக இருக்கும் என்பதால் அது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்


யாழ். நகரின் சுற்று சூழல் தொடர்பில் பொதுமக்களிடம் அரச அதிபர் விடுத்துள்ள கோரிக்கை samugammedia யாழ் மாநகர சபையின் சுற்று சுழலில் காணப்படும் அல்லது போடப்படும்  கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு பொது மக்களே சிறப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தொடர்ந்தும் அங்கிருந்து கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு சபை ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை, பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் அனைத்தையும் சேர்த்து கடற்கரை சுத்திகரிப்பு பணியானது இன்று காலை குருநகரில் முன்னெடுக்கப்பட்டது. அங்கு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார், தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், சுற்று சூழல் பாதுகாப்பு சபை ஏற்பாட்டில் யாழ் மாநகர சபை, பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் அனைத்தையும் சேர்த்து கடற்கரை சுத்திகரிப்பு பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதி தொடர்ந்து மாசடைந்து வர காரணம் கடல் மூலமாக வருகின்ற அழுக்குகளை காட்டிலும் பொது மக்கள் மூலமே அதிகளவு மாசடைகின்றது. இதனை படையினர் மற்றும் போலிசாரின் உதவியுடன் சுத்தம் செய்யலாம். ஆயினும் தொடர்ந்தும் அவர்களை இதில் ஈடுபடுத்துவது என்பது இயலுமான காரியமில்லை. ஆகையால் பொது மக்களே குறிப்பாக இப்பகுதி மக்களே சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்  செயற்பட வேண்டும்.மாநகர சபையினுடைய சுற்றுசூழலிலுள்ள கழிவுகளை அகற்றும் செயற்பாட்டினை அதிகரிக்குமாறு ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுகின்றேன். அத்துடன் இந்த அழுக்குகளை அகற்றுவதற்குரிய ஆளணி வளம் மற்றும் வாகனங்கள் போன்றன பற்றாக்குறையாக இருக்கும் என்பதால் அது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement