• Jan 19 2025

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் திருவெம்பாவைப் பாராயணம் மாணிக்கவாசகர் திருவீதியுலாவுடன் நிறைவு

Chithra / Jan 13th 2025, 8:56 am
image


 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த 4 ஆம் திகதி முதல்  முன்னெடுக்கப்பட்டு வந்த திருவெம்பாவைப் பாராயணம் இன்றைய தினம் மாணிக்கவாசகர் திருவீதியுலாவுடன் நிறைவு பெற்றது.

இன்று (13) அதிகாலை 3 மணியளவில் பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவீதியுலா,

கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியினைக் கடந்து, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஊடாக திருநெல்வேலி சந்தியை அடைந்து அதனூடாக பரமேஸ்வராச்சந்தியினை அடைந்து தொடர்ந்து திருநெல்வேலி வீரகத்தி விநாயகர் ஆலய வழிபாடுகளை தொடர்ந்து மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவெம்பாவை பாராயணத்துடன் வந்தடைந்தது. 

இதன்பொழுது வீதியில் காணபட்ட ஆலயங்களில் விசேட வழிபாடுகளுடன் அடியவர்களின் வழிபாடுகளும் இடம்பெற்று பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

மேற்படி பாராயணத்தில் யாழ் இந்து மன்ற பெரும் பொருளாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான  சி.ரமணராஜா, விஞ்ஞான பீட பேராசிரியர் ஐங்கரன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

திருவெம்பாவை விரத நாளினை முன்னிட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கபட்ட  மார்கழி விழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளது.


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் திருவெம்பாவைப் பாராயணம் மாணிக்கவாசகர் திருவீதியுலாவுடன் நிறைவு  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த 4 ஆம் திகதி முதல்  முன்னெடுக்கப்பட்டு வந்த திருவெம்பாவைப் பாராயணம் இன்றைய தினம் மாணிக்கவாசகர் திருவீதியுலாவுடன் நிறைவு பெற்றது.இன்று (13) அதிகாலை 3 மணியளவில் பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவீதியுலா,கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியினைக் கடந்து, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஊடாக திருநெல்வேலி சந்தியை அடைந்து அதனூடாக பரமேஸ்வராச்சந்தியினை அடைந்து தொடர்ந்து திருநெல்வேலி வீரகத்தி விநாயகர் ஆலய வழிபாடுகளை தொடர்ந்து மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவெம்பாவை பாராயணத்துடன் வந்தடைந்தது. இதன்பொழுது வீதியில் காணபட்ட ஆலயங்களில் விசேட வழிபாடுகளுடன் அடியவர்களின் வழிபாடுகளும் இடம்பெற்று பிரசாதங்களும் வழங்கப்பட்டது.மேற்படி பாராயணத்தில் யாழ் இந்து மன்ற பெரும் பொருளாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான  சி.ரமணராஜா, விஞ்ஞான பீட பேராசிரியர் ஐங்கரன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.திருவெம்பாவை விரத நாளினை முன்னிட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கபட்ட  மார்கழி விழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement