• Dec 27 2024

யாழில் உணவு நிலையங்களில் சுகாதார பிரிவினர், திடீர் பரிசோதனை : 2 உணவு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Tharmini / Dec 24th 2024, 2:26 pm
image

பண்டிகைக் காலத்தையொட்டி யாழ். மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ், இன்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இன்று (24) யாழ். நல்லூர், உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இக் களப் பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் ஈடுபட்டிருந்தன. 

இவர்களால் இன்று (24) 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டன. 

இவற்றில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன.

12 உணவு கையாளும் நிலையங்களுக்கு குறைபாடுகளை சீர்செய்யும்படி எழுத்துமூல அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 

15 உணவு கையாளும் நிலையங்களில் தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இப்பரிசோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்,- என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி, ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 


யாழில் உணவு நிலையங்களில் சுகாதார பிரிவினர், திடீர் பரிசோதனை : 2 உணவு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பண்டிகைக் காலத்தையொட்டி யாழ். மாவட்டத்தில் உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ், இன்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று (24) யாழ். நல்லூர், உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.இக் களப் பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் ஈடுபட்டிருந்தன. இவர்களால் இன்று (24) 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டன. இவற்றில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன.12 உணவு கையாளும் நிலையங்களுக்கு குறைபாடுகளை சீர்செய்யும்படி எழுத்துமூல அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 15 உணவு கையாளும் நிலையங்களில் தரமற்ற உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.2 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இப்பரிசோதனை நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்,- என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி, ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement