• Apr 25 2025

சுகாதார அமைச்சர் நலிந்த மன்னார் விஜயம்

Chithra / Apr 25th 2025, 2:30 pm
image

மன்னார் மாவட்ட மற்றும் பிரதேச வைத்திய சாலைகளின் குறைபாடுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான விசேட கண்கானிப்பு விஜயம் ஒன்றை  சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ நேற்றைய தினம்  மேற்கொண்டிருந்தார்.

குறிப்பாக மன்னார் மாவட்ட வைத்தியசாலை, அடம்பன், வங்காலை, முருங்கன் உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நேரடியாக வைத்தியசாலைகளின் வளப்பற்றாக்குறை மற்றும் வைத்தியர் பற்றாகுறைகள் தொடர்பில் ஆராய்ந்தார்

அதேநேரம் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருடனும் நேரடியாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்

குறித்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

மன்னார் மாவட்டத்தில் வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அதே நேரம் வைத்திய உபகரணங்கள் மற்றும் கட்டடங்களுக்கான பற்றாக்குறையும் காணப்படுவதாகவும் அவற்றை கொண்டு இங்குள்ள சுகாதார துறையினர் அதி உயர் சேவையை வழங்கி வருவதாகவும் விரைவில் இங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான துரித நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றுலா துறையையும் இங்கு விருத்தி செய்து நாடு முழுவதும் சிறந்த சுகாதார சேவையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்


சுகாதார அமைச்சர் நலிந்த மன்னார் விஜயம் மன்னார் மாவட்ட மற்றும் பிரதேச வைத்திய சாலைகளின் குறைபாடுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான விசேட கண்கானிப்பு விஜயம் ஒன்றை  சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ நேற்றைய தினம்  மேற்கொண்டிருந்தார்.குறிப்பாக மன்னார் மாவட்ட வைத்தியசாலை, அடம்பன், வங்காலை, முருங்கன் உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நேரடியாக வைத்தியசாலைகளின் வளப்பற்றாக்குறை மற்றும் வைத்தியர் பற்றாகுறைகள் தொடர்பில் ஆராய்ந்தார்அதேநேரம் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருடனும் நேரடியாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்குறித்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸமன்னார் மாவட்டத்தில் வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அதே நேரம் வைத்திய உபகரணங்கள் மற்றும் கட்டடங்களுக்கான பற்றாக்குறையும் காணப்படுவதாகவும் அவற்றை கொண்டு இங்குள்ள சுகாதார துறையினர் அதி உயர் சேவையை வழங்கி வருவதாகவும் விரைவில் இங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான துரித நடவடிக்கை எடுப்பதாகவும் சுற்றுலா துறையையும் இங்கு விருத்தி செய்து நாடு முழுவதும் சிறந்த சுகாதார சேவையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்

Advertisement

Advertisement

Advertisement