இலங்கையின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக சுகாதார மற்றும் பொது ஊடக அமைச்சு வழிகாட்டுதல் குழுவொன்றை ஸ்தாபித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கு அமைய டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு மூலோபாய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, சர்வதேச திட்டங்கள், மனிதவள அபிவிருத்தி ஆகியவை முக்கியமாகப் பரிசீலிக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர்களான ஹன்சக விஜேமுனி, எரங்க வீரரத்ன மற்றும் ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஹன்ஸ் விஜேசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் மயமாகப்போகும் சுகாதார சேவை - புதிய புரட்சி ஆரம்பம் இலங்கையின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக சுகாதார மற்றும் பொது ஊடக அமைச்சு வழிகாட்டுதல் குழுவொன்றை ஸ்தாபித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கு அமைய டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு மூலோபாய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, சர்வதேச திட்டங்கள், மனிதவள அபிவிருத்தி ஆகியவை முக்கியமாகப் பரிசீலிக்கப்பட்டன.இக்கலந்துரையாடலில் பிரதி அமைச்சர்களான ஹன்சக விஜேமுனி, எரங்க வீரரத்ன மற்றும் ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான சிரேஷ்ட ஆலோசகர் ஹன்ஸ் விஜேசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.