2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துத் தேவைகளை எளிதாக்கும் வகையில் இன்று முதல் பரீட்சை முடியவடையும் வரை விசேட பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.
இதேவேளை அனைத்து திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளும் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைக் காலத்தில் எந்தவித தாமதமோ அல்லது இரத்துகளோ இல்லாமல் ரயில் சேவைகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துத் தேவைகளை எளிதாக்கும் வகையில் இன்று முதல் பரீட்சை முடியவடையும் வரை விசேட பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.இதேவேளை அனைத்து திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளும் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சைக் காலத்தில் எந்தவித தாமதமோ அல்லது இரத்துகளோ இல்லாமல் ரயில் சேவைகள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.