• Nov 26 2024

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு எச்சரிக்கை..!!

Tamil nila / Feb 16th 2024, 9:19 pm
image

நுவரெலியாவில் பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதனால் பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வானங்களை ஒலி, ஒளியுடன் செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த எச்சரிக்கையை நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் இன்று (16) விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று (16) மாலை மூன்று மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி புகை மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் அவ் வீதியில் மிக அவமனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன  சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியாவில் கடும் பனி மூட்டம் - சாரதிகளுக்கு எச்சரிக்கை. நுவரெலியாவில் பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதனால் பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வானங்களை ஒலி, ஒளியுடன் செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த இந்த எச்சரிக்கையை நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் இன்று (16) விடுத்துள்ளனர்.மேலும் கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இன்று (16) மாலை மூன்று மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி புகை மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.அதே நேரத்தில் நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை பனி புகை மூட்டம் அதிகரித்துள்ளதால் அவ் வீதியில் மிக அவமனத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா பொலிஸார் வாகன  சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement