• May 20 2024

பாகிஸ்தானில் தொடரும் கனமழை..! இருபதை தாண்டிய உயிரிழப்பு..!samugammedia

Sharmi / Jun 28th 2023, 12:05 pm
image

Advertisement

பாகிஸ்தானில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களின் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் மற்றும் ஷேக்புரா, நரோவல் ஆகிய மாவட்டங்களிலும்  கனமழை நீடித்து வருவதால் இயற்கை அனர்த்தங்களால் நரோவல் மாவட்டத்தில் 5 பேர், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உட்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன்,  மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அது மட்டுமன்றி, நரோவல், லாகூர், சினியோட் மற்றும் ஷேக்புரா போன்ற  பல்வேறு மாவட்டங்களில் மின்கசிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்தமையால்  75 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 30 ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமன்றி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாரும், அவதானமாக  வாகனங்களை  ஓட்டுமாறும் மற்றும்  மின் கம்பங்களில் இருந்து விலகி இருக்குமாறும் மக்களிற்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களின் நகர்ப்புறங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேஏறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாண அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானில் தொடரும் கனமழை. இருபதை தாண்டிய உயிரிழப்பு.samugammedia பாகிஸ்தானில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களின் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணம் மற்றும் ஷேக்புரா, நரோவல் ஆகிய மாவட்டங்களிலும்  கனமழை நீடித்து வருவதால் இயற்கை அனர்த்தங்களால் நரோவல் மாவட்டத்தில் 5 பேர், ஷேக்புரா மாவட்டத்தில் 2 பேர் என 7 பேர் உட்பட மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்,  மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 7 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், மின்சாரம் தாக்கி 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.அது மட்டுமன்றி, நரோவல், லாகூர், சினியோட் மற்றும் ஷேக்புரா போன்ற  பல்வேறு மாவட்டங்களில் மின்கசிவு மற்றும் சுவர் இடிந்து விழுந்தமையால்  75 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில், வரும் 30 ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமன்றி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாரும், அவதானமாக  வாகனங்களை  ஓட்டுமாறும் மற்றும்  மின் கம்பங்களில் இருந்து விலகி இருக்குமாறும் மக்களிற்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல்வேறு மாவட்டங்களின் நகர்ப்புறங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேஏறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாண அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement