மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் அடைமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின.
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, பெரிய போர் தீவு, பட்டிருப்பு, குருமண்வெளி, எருவில், ஓந்தாச்சிமடம், பெரிய போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் தொடரும் கனமழை - நீரில் மூழ்கிய வீதிகள், தாழ்நிலப் பகுதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வாகரை, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் உட்பட பல பிரதேச செயலக பிரிவுகளில் பல வீதிகள் அடைமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கின.மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, பெரிய போர் தீவு, பட்டிருப்பு, குருமண்வெளி, எருவில், ஓந்தாச்சிமடம், பெரிய போன்ற பகுதிகளில் உள்ள தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.