• Apr 01 2025

03ம் திகதி முதல் வடக்குகிழக்கில் கனமழை; மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை

Chithra / Mar 26th 2025, 3:30 pm
image



வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளின் போட் பிளேயருக்கு அண்மையாக எதிர்வரும் 03 ஆம் திகதி 

காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

காலநிலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

இது எதிர்வரும் 5ம் திகதியளவில் தாழமுக்கமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இதன் நகர்வுப் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடம் பற்றி அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும். 

இத்தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

சிறு போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

அதேவேளை எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அவர் அறிவித்துள்ளார்.


03ம் திகதி முதல் வடக்குகிழக்கில் கனமழை; மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளின் போட் பிளேயருக்கு அண்மையாக எதிர்வரும் 03 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.காலநிலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இது எதிர்வரும் 5ம் திகதியளவில் தாழமுக்கமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் நகர்வுப் பாதை மற்றும் கரையைக் கடக்கும் இடம் பற்றி அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும். இத்தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிறு போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.அதேவேளை எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அவர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement