• Nov 19 2024

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Tamil nila / Nov 9th 2024, 7:19 am
image

மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

 மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

 நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை- மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மத்திய , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (09) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.  மத்திய , சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.  நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement