• Dec 14 2024

தொடரும் கனமழை; திருமலையில் நூற்றுக்கணக்காணோர் இடம்பெயர்வு..!

Sharmi / Nov 25th 2024, 2:31 pm
image

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து இன்று(25) பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பதில் பிரதேச செயலாளர் எம்.டீ.எம்.இஸ்ஸத் தெரிவித்தார்.

அதேவேளை, தங்கபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் 46 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் தங்கபுரம் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், லிங்கநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் இடம்பெயர்ந்து லிங்கநகர் பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவரப் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை இடம்பெயர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உணவுகளை பிரதேச செயலகம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 


தொடரும் கனமழை; திருமலையில் நூற்றுக்கணக்காணோர் இடம்பெயர்வு. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து இன்று(25) பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பதில் பிரதேச செயலாளர் எம்.டீ.எம்.இஸ்ஸத் தெரிவித்தார்.அதேவேளை, தங்கபுரம் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் 46 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் தங்கபுரம் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், லிங்கநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் இடம்பெயர்ந்து லிங்கநகர் பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சேருநுவரப் பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.அதேவேளை இடம்பெயர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான உணவுகளை பிரதேச செயலகம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement