• Apr 27 2024

மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கடும் மழை - பாடசாலைக்குள் உட்புகுந்த வெள்ளம்..! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 4:00 pm
image

Advertisement

நாட்டின் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாடசாலை மாணவர்கள் உற்பட பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்துள்ளனர்.


காலம் காலமாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என பல்வேறு அமைச்சு பதவிகளை மலையக அமைச்சர்கள் வகித்து வந்தாலும், மக்களின் பிரச்சனைகளுக்கான பதில்கள் தீர்க்கப்படாத வண்ணமே காணப்படுகிறன.



மலையக அரசியலில் முன்னணி கட்சியான தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் சில தினங்களுக்கு முன்னதாக, “மலையக மக்களின் வாழ்வியலுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் எங்கள் கட்சி இணைந்து செயற்படும். அதில் மலையக மாணவர்களின் கல்விக்கு அளப்பரிய சேவை மாற்றப்படும்.” என கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.


இவ்வாறான கருத்துக்களும் வாக்குறுதிகளும் வெறும் பேச்சாகவே காணப்படுகின்றதே தவிர செயல்களில் உள்ளதா என்பது கேள்விக் குறியே


தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபதலைவர் கணபதி கனகராஜ் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற நகரமான பொகவந்தலாவ நகரில் காணப்படும் பிரபல பாடசாலையானா சென்மேரிஸ் மத்திய கல்லூரி இன்று வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகிறது.


அப்பிரதேசத்தின் பிரதேசசபை தவிசாளரால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடம்தான் இந்த வெள்ளம் பாடசாலைக்குள் உட்புக காரணம் என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.



சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்ந்தும் சிக்கலுக்குள்ளயே சிக்கி கிடக்கிறது.


அந்த வகையில் பொகவந்தலாவ,சென்மேரிஸ் கல்லூரின் கற்றல் நடவடிக்கைகள், அங்கு பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை பெய்த கடும் மழையின்போது, கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக குறித்த வெள்ளமானது கல்லூரிக்குள் புகுந்துள்ளது.



இதன் காரணமாக, நேற்றைய தினம் இடைநடுவே மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், இன்று காலை வெள்ள நீர் வெளியேறியிருந்த போதிலும், வகுப்பறைகளில், சேறு நிறைந்திருந்தமையால், மாணவர்கள் அதனை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதுவே மலையகத்தின் நிலைமை.வாக்குகளுக்காக கைதூக்கும் அரசியல் வாதிகள் தமது இலக்கை அடைந்த பின் மக்களை கை கழுவி செல்வது காலம் காலமாக மலையக அரசியல் அரசியல்வாதிகளின் போக்காக காணப்படுவதே நிதர்சனம். 

மத்திய மலைநாட்டில் பெய்துவரும் கடும் மழை - பாடசாலைக்குள் உட்புகுந்த வெள்ளம். SamugamMedia நாட்டின் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பாடசாலை மாணவர்கள் உற்பட பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்துள்ளனர்.காலம் காலமாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என பல்வேறு அமைச்சு பதவிகளை மலையக அமைச்சர்கள் வகித்து வந்தாலும், மக்களின் பிரச்சனைகளுக்கான பதில்கள் தீர்க்கப்படாத வண்ணமே காணப்படுகிறன.மலையக அரசியலில் முன்னணி கட்சியான தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் கணபதி கனகராஜ் சில தினங்களுக்கு முன்னதாக, “மலையக மக்களின் வாழ்வியலுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் எங்கள் கட்சி இணைந்து செயற்படும். அதில் மலையக மாணவர்களின் கல்விக்கு அளப்பரிய சேவை மாற்றப்படும்.” என கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.இவ்வாறான கருத்துக்களும் வாக்குறுதிகளும் வெறும் பேச்சாகவே காணப்படுகின்றதே தவிர செயல்களில் உள்ளதா என்பது கேள்விக் குறியேதற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உபதலைவர் கணபதி கனகராஜ் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற நகரமான பொகவந்தலாவ நகரில் காணப்படும் பிரபல பாடசாலையானா சென்மேரிஸ் மத்திய கல்லூரி இன்று வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகிறது.அப்பிரதேசத்தின் பிரதேசசபை தவிசாளரால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடம்தான் இந்த வெள்ளம் பாடசாலைக்குள் உட்புக காரணம் என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்வியல் தொடர்ந்தும் சிக்கலுக்குள்ளயே சிக்கி கிடக்கிறது.அந்த வகையில் பொகவந்தலாவ,சென்மேரிஸ் கல்லூரின் கற்றல் நடவடிக்கைகள், அங்கு பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்று பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று மாலை பெய்த கடும் மழையின்போது, கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக குறித்த வெள்ளமானது கல்லூரிக்குள் புகுந்துள்ளது.இதன் காரணமாக, நேற்றைய தினம் இடைநடுவே மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.இந்த நிலையில், இன்று காலை வெள்ள நீர் வெளியேறியிருந்த போதிலும், வகுப்பறைகளில், சேறு நிறைந்திருந்தமையால், மாணவர்கள் அதனை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதுவே மலையகத்தின் நிலைமை.வாக்குகளுக்காக கைதூக்கும் அரசியல் வாதிகள் தமது இலக்கை அடைந்த பின் மக்களை கை கழுவி செல்வது காலம் காலமாக மலையக அரசியல் அரசியல்வாதிகளின் போக்காக காணப்படுவதே நிதர்சனம். 

Advertisement

Advertisement

Advertisement