• Jul 01 2024

புதுடில்லியில் 88 ஆண்டுகளுக்கு பின் கொட்டித் தீர்த்த கன மழை!

Tamil nila / Jun 29th 2024, 7:05 pm
image

Advertisement

இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நேற்று முன் தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

இந்த கடும் மழை டில்லியை புரட்டிப் போட்டு விட்டது என்று கூறலாம்.

இந்த கடும் மழையினால் 70 அடி உயரத்திலிருந்த டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் நால்வர் பரிதாபகமாக உயிரிழந்ததோடு, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல கார், பொருட்களை கொண்டு செல்லும் வண்டிகள் என அனைத்தும் சேதமடைந்தன.

அது மட்டுமின்றி நேற்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையில் சுமார் 15 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நகரம் முழுவரும் வெள்ள நீர் தேங்கி நின்று கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் பொதுமக்கள், வியாபாரம் செய்பவர்கள் என அனைவரினதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மேலும் கடும் மழையினால் ரயில் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில ரயில்கள் தாமதமாகவும் புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டில்லியில் இன்னும் ஒரு வாரத்துர்க்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுடில்லியில் 88 ஆண்டுகளுக்கு பின் கொட்டித் தீர்த்த கன மழை இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நேற்று முன் தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இந்த கடும் மழை டில்லியை புரட்டிப் போட்டு விட்டது என்று கூறலாம்.இந்த கடும் மழையினால் 70 அடி உயரத்திலிருந்த டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் நால்வர் பரிதாபகமாக உயிரிழந்ததோடு, 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பல கார், பொருட்களை கொண்டு செல்லும் வண்டிகள் என அனைத்தும் சேதமடைந்தன.அது மட்டுமின்றி நேற்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 5.30 மணி வரையில் சுமார் 15 மி.மீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நகரம் முழுவரும் வெள்ள நீர் தேங்கி நின்று கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.இதனால் பொதுமக்கள், வியாபாரம் செய்பவர்கள் என அனைவரினதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.மேலும் கடும் மழையினால் ரயில் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில ரயில்கள் தாமதமாகவும் புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.டில்லியில் இன்னும் ஒரு வாரத்துர்க்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement