• Nov 19 2024

கிழக்கில் திடீர் மழை -காத்தான்குடி கடலில் பெருமளவிலான சூடை மீன்கள் பிடிப்பு- மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி!

Tamil nila / Aug 11th 2024, 7:47 pm
image

கிழக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக மிகவும் கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. 

இந்நிலையில்  கடும் வரட்சியான காலநிலையைடுத்து நேற்று இம் மாகாணத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்துள்ளது. 

இதனை அடுத்து காத்தான் குடி கடற்பிரதேசத்தில் இன்று காலை மிகவும் அதிகளவிலான சூடை மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி ஏத்துக்கால் கடற் பிரதேசத்தில் இன்று காலை மீனவர்கள் பெருமளவிலான சூடை மீன்களை தமது வலைகளில் பிடித்து கரைக்கு கொண்டு வந்தே விற்பனை செய்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது .

கரைவலை போன்று வளைச்சல் வலை எனும் மீன்பிடித்தல் முறையூடாகவே குறித்த சூரை மீன்களை பிடித்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகளவிலான மீனவர்கள் ஒன்று சேர்ந்து கடலின் நடுப்பகுதியில் கடல் பகுதியை  வளைத்து வலையைக் கட்டிவைத்து   கரையை நோக்கி வருகின்ற குறித்த  மீன்களை பிடித்ததாக மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

பிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சூடை மீன்கள் இன்று காலை காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சாதாரணமான நேரங்களில் குறித்த மீன் ஒரு கிலோ 700 ரூபா முதல் 800 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. 

திடீரென பிடிப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சூடை மீன்களினால் மீனவர்கள் பெரும் இலாபமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கிழக்கில் திடீர் மழை -காத்தான்குடி கடலில் பெருமளவிலான சூடை மீன்கள் பிடிப்பு- மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக மிகவும் கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இந்நிலையில்  கடும் வரட்சியான காலநிலையைடுத்து நேற்று இம் மாகாணத்தில் பல இடங்களில் திடீரென மழை பெய்துள்ளது. இதனை அடுத்து காத்தான் குடி கடற்பிரதேசத்தில் இன்று காலை மிகவும் அதிகளவிலான சூடை மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.காத்தான்குடி ஏத்துக்கால் கடற் பிரதேசத்தில் இன்று காலை மீனவர்கள் பெருமளவிலான சூடை மீன்களை தமது வலைகளில் பிடித்து கரைக்கு கொண்டு வந்தே விற்பனை செய்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது .கரைவலை போன்று வளைச்சல் வலை எனும் மீன்பிடித்தல் முறையூடாகவே குறித்த சூரை மீன்களை பிடித்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதிகளவிலான மீனவர்கள் ஒன்று சேர்ந்து கடலின் நடுப்பகுதியில் கடல் பகுதியை  வளைத்து வலையைக் கட்டிவைத்து   கரையை நோக்கி வருகின்ற குறித்த  மீன்களை பிடித்ததாக மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். பிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சூடை மீன்கள் இன்று காலை காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சாதாரணமான நேரங்களில் குறித்த மீன் ஒரு கிலோ 700 ரூபா முதல் 800 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. திடீரென பிடிப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சூடை மீன்களினால் மீனவர்கள் பெரும் இலாபமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement