• Nov 28 2024

சீனாவில் கடும் பனிப்பொழிவு...! சாலையில் அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்...!samugammedia

Sharmi / Feb 6th 2024, 1:59 pm
image

சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால்  ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹாண் பகுதி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வானிலை அவதான மையம் தெரிவிக்கையில்,

மத்திய சீனாவில் இதுவரை இல்லாத அளவாக ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு நாளை(07) வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுமார் 4000 வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை போக்குவரத்து சீராகும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த இதேவேளை சீனாவில் எதிர்வரும் சனிக்கிழமை  லூனார் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக இரவு நேரங்களில் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காகவும், சொந்த ஊர்களுக்கும் வாகனங்களில் படையெடுத்ததால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சீனாவில் கடும் பனிப்பொழிவு. சாலையில் அணி வகுத்து நிற்கும் வாகனங்கள்.samugammedia சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால்  ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹாண் பகுதி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் வானிலை அவதான மையம் தெரிவிக்கையில், மத்திய சீனாவில் இதுவரை இல்லாத அளவாக ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு நாளை(07) வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.இந்நிலையில், சுமார் 4000 வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.இதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை போக்குவரத்து சீராகும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குறித்த இதேவேளை சீனாவில் எதிர்வரும் சனிக்கிழமை  லூனார் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக இரவு நேரங்களில் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காகவும், சொந்த ஊர்களுக்கும் வாகனங்களில் படையெடுத்ததால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement