குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்ட சம்பவமொன்று நுவரெலியா-நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது.
அரிசி விலை கடந்த காலங்களில் அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 3,000 கிலோ கிராம் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில், 1,600 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யப்பட்டது. அதற்கிடையில் அரிசியின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது. ஆகையால், மீதமிருந்த 1,400 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
அரிசி காலவதியானதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனை அறிந்துகொண்ட தோட்ட நிர்வாகம் அவற்றை கடந்த நாட்களில் குழிதோண்டி புதைத்துள்ளது.
இது தொடர்பில், நானுஓயா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பிரகாரம், செவ்வாய்க்கிழமை (02) அவை தோண்டி எடுக்கப்பட்டன.
அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் , பரிசோனைக்காக அரிசியின் மாதிரிகளையும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்
நுவரெலியாவில் மறைத்து வைத்த அரிசி ; நாற்றமெடுத்த நிலையில் மீட்பு samugammedia குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்ட சம்பவமொன்று நுவரெலியா-நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது.அரிசி விலை கடந்த காலங்களில் அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக நானுஓயா கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக 3,000 கிலோ கிராம் அரிசி கொண்டுவரப்பட்டுள்ளது.அதில், 1,600 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யப்பட்டது. அதற்கிடையில் அரிசியின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது. ஆகையால், மீதமிருந்த 1,400 கிலோகிராம் அரிசி விற்பனைச் செய்யாமல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.அரிசி காலவதியானதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனை அறிந்துகொண்ட தோட்ட நிர்வாகம் அவற்றை கடந்த நாட்களில் குழிதோண்டி புதைத்துள்ளது.இது தொடர்பில், நானுஓயா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பிரகாரம், செவ்வாய்க்கிழமை (02) அவை தோண்டி எடுக்கப்பட்டன.அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் , பரிசோனைக்காக அரிசியின் மாதிரிகளையும் எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்