• May 20 2024

அதிக வெப்பத்தால் மனநோய் ஏற்படும் அபாயம்! இலங்கையர்களுக்கு மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Apr 21st 2023, 2:57 pm
image

Advertisement

தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மனநல நோய்கள் அதிகரிக்கலாம் என மனநல மருத்துவர் ரூபி ரூபன் தெரிவித்தார்.

இதனால் மக்கள் வன்முறைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இதன் காரணமாக மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூபி ரூபன், இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவதாகவும் அதனால் அவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும் மனநல மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலை மே இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.


அதிக வெப்பத்தால் மனநோய் ஏற்படும் அபாயம் இலங்கையர்களுக்கு மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் samugammedia தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மனநல நோய்கள் அதிகரிக்கலாம் என மனநல மருத்துவர் ரூபி ரூபன் தெரிவித்தார்.இதனால் மக்கள் வன்முறைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.இதன் காரணமாக மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூபி ரூபன், இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவதாகவும் அதனால் அவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும் மனநல மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலை மே இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement