மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் நேற்று(28) நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரின் சார்பில் ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஊடாக சந்திப்பில், நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரின் சார்பில் பரமநாதன் குமாரசிங்கம், சுப்பிரமணியம் மோகனராசா ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதன்போது இந்நிகழ்வை சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள், மலையகத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், இந்திய தனியார் தொலைக்காட்சியில் பாடல் போட்டியில் வெற்றிப்பெற்ற கில்மிசா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோரும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு - விடுக்கப்பட்ட அழைப்பு.samugammedia மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இது தொடர்பில் நேற்று(28) நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரின் சார்பில் ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஊடாக சந்திப்பில், நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரின் சார்பில் பரமநாதன் குமாரசிங்கம், சுப்பிரமணியம் மோகனராசா ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.இதன்போது இந்நிகழ்வை சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள், மலையகத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மேலும், இந்திய தனியார் தொலைக்காட்சியில் பாடல் போட்டியில் வெற்றிப்பெற்ற கில்மிசா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோரும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.