• May 17 2024

நத்தார் பண்டிகையினை கொண்டாட தயாராகும் மலையகம்!

Sharmi / Dec 24th 2022, 6:31 pm
image

Advertisement

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2022 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்றையதினம்  அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர்.

இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.

இன்றையதினம்  நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.




 

நத்தார் பண்டிகையினை கொண்டாட தயாராகும் மலையகம் உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் 25.12.2022 அன்று மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்றையதினம்  அட்டனில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது கிறிஸ்தவ மக்கள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர்.இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.இன்றையதினம்  நள்ளிரவு 12 மணியளவில் அட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement