• May 02 2024

தீவிரமடையும் கொரோனா பரவல்: மௌனம் காக்கும் சீனா!

Sharmi / Dec 24th 2022, 6:38 pm
image

Advertisement

சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிப்பால்  சீனாவில் அனைத்து மருத்துவமனைகளும்  நோயாளிகளால் நிரம்பி வழிவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால், கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை.

நேற்று முன்தினம் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் தினமும் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகளில்  நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட காணொளிகள்  சமூக வலைதளங்களில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீவிரமடையும் கொரோனா பரவல்: மௌனம் காக்கும் சீனா சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிப்பால்  சீனாவில் அனைத்து மருத்துவமனைகளும்  நோயாளிகளால் நிரம்பி வழிவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை.நேற்று முன்தினம் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழந்ததாக சீனாவில் பதிவாகவில்லை. நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் தினமும் 5 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மருத்துவமனைகளில்  நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட காணொளிகள்  சமூக வலைதளங்களில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement