• May 07 2024

குன்றும் குழியுமாக உள்ள பாதை - அடிப்படை வசதிகள் இல்லை - டங்கல் மேற் பிரிவு மக்கள் விசனம்...!samugammedia

Anaath / Dec 22nd 2023, 1:04 pm
image

Advertisement

மஸ்கெலியா பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட   டங்கல்  மேற் பிரிவு மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கடந்த பலத்த சாத்தங்களாக வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக இத்தோட்டப் பகுதிக்கு செல்லும் பாதையானது குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்து வருவதன் காரணமாக நோயாளிகளை கொண்டு செல்வதில் மாத்திரம் அன்று பாடசாலைக்கு செல்லும் சின்னஞ்சிறு மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். 

இத்தோட்ட பகுதியில் இருந்து சுமார் 8 km வரை நடந்து சென்று தமது கல்வியை தொடர வேண்டிய துர்பாக்கிய நிலை இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் தினமும் மோசமான நிலையில் காணப்படும் பாதையின் ஊடாக கால் நடையாக  பயணித்து தமிழ் கல்வியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

1985 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்று இயங்கி வந்த போதிலும் அதன் பிறகு எவ்வித காரணமுமின்றி குறித்த பாடசாலை மூடப்பட்டதன் காரணமாகவே இப்பகுதியில் உள்ள சின்ன சிறுவர்கள் தொலைதூரம் நடந்து சென்று தமது கல்வியை தொடர வேண்டி உள்ளதாக பெற்றோர்கள் மேலும் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் ஹித்தோட்டத்திற்கென வைத்தியசாலை ஒன்று இல்லாத நிலையில் டங்கல் கீழ் பிரிவில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்ற போதிலும் அங்கு தேவையான வைத்தியர்களோ அல்லது சுகாதார தரப்பினரோ இல்லாத நிலையில் தமது சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மற்றும் தமக்கு ஏற்படும் நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான சிகிச்சைகளுக்காக ஹித்தோட்ட மக்கள் பல்லாயிரம் ரூபாய் செலவழித்து மஸ்கெலியா மற்றும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே தற்போது அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் மலையக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் எதிர் தரப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இத்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் வைத்தியசாலை மற்றும் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் பிரச்சனைகளை தீர்த்து எத்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு பிரதேச மக்கள் பகிரங்க வேண்டுகோளை விடுகின்றனர். 

அத்தோடு மூடப்பட்ட ஆரம்ப பாடசாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தனர்.

குன்றும் குழியுமாக உள்ள பாதை - அடிப்படை வசதிகள் இல்லை - டங்கல் மேற் பிரிவு மக்கள் விசனம்.samugammedia மஸ்கெலியா பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட   டங்கல்  மேற் பிரிவு மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கடந்த பலத்த சாத்தங்களாக வாழ்ந்து வருகின்றனர்.  குறிப்பாக இத்தோட்டப் பகுதிக்கு செல்லும் பாதையானது குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்து வருவதன் காரணமாக நோயாளிகளை கொண்டு செல்வதில் மாத்திரம் அன்று பாடசாலைக்கு செல்லும் சின்னஞ்சிறு மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். இத்தோட்ட பகுதியில் இருந்து சுமார் 8 km வரை நடந்து சென்று தமது கல்வியை தொடர வேண்டிய துர்பாக்கிய நிலை இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் தினமும் மோசமான நிலையில் காணப்படும் பாதையின் ஊடாக கால் நடையாக  பயணித்து தமிழ் கல்வியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.  1985 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்று இயங்கி வந்த போதிலும் அதன் பிறகு எவ்வித காரணமுமின்றி குறித்த பாடசாலை மூடப்பட்டதன் காரணமாகவே இப்பகுதியில் உள்ள சின்ன சிறுவர்கள் தொலைதூரம் நடந்து சென்று தமது கல்வியை தொடர வேண்டி உள்ளதாக பெற்றோர்கள் மேலும் விசனம் தெரிவிக்கின்றனர்.அதேபோல் ஹித்தோட்டத்திற்கென வைத்தியசாலை ஒன்று இல்லாத நிலையில் டங்கல் கீழ் பிரிவில் வைத்தியசாலை ஒன்று இருக்கின்ற போதிலும் அங்கு தேவையான வைத்தியர்களோ அல்லது சுகாதார தரப்பினரோ இல்லாத நிலையில் தமது சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மற்றும் தமக்கு ஏற்படும் நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான சிகிச்சைகளுக்காக ஹித்தோட்ட மக்கள் பல்லாயிரம் ரூபாய் செலவழித்து மஸ்கெலியா மற்றும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தற்போது அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் மலையக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் எதிர் தரப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இத்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் வைத்தியசாலை மற்றும் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் பிரச்சனைகளை தீர்த்து எத்தோட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு பிரதேச மக்கள் பகிரங்க வேண்டுகோளை விடுகின்றனர். அத்தோடு மூடப்பட்ட ஆரம்ப பாடசாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement