• Sep 20 2024

எச்.எம்.பௌசியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் - சஜித் அதிரடி...!samugammedia

Sharmi / May 9th 2023, 11:05 am
image

Advertisement

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டிருந்த எச்.எம்.பௌசியின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்குழு நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தவும் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

குறிப்பாக எந்தவொரு விடயத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவோ அல்லது கலந்துரையாடவோ கூடாது என கட்சி தீர்மானித்துள்ளதாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டயானா கமகே மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து எச். எம். பௌசியின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தவும் செயற்குழு தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

எச்.எம்.பௌசியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் - சஜித் அதிரடி.samugammedia அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டிருந்த எச்.எம்.பௌசியின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.கட்சியின் செயற்குழு நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தவும் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.குறிப்பாக எந்தவொரு விடயத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவோ அல்லது கலந்துரையாடவோ கூடாது என கட்சி தீர்மானித்துள்ளதாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டயானா கமகே மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து எச். எம். பௌசியின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தவும் செயற்குழு தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement