• Dec 09 2024

கஹத்துடுவ பகுதியில் கோர விபத்து...! பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை...!

Sharmi / May 30th 2024, 3:38 pm
image

கஹத்துடுவ வெத்தர வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மாணவன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிலியந்தலை திசையிலிருந்து கஹத்துடுவ திசை நோக்கிச் சென்ற காரின் வலதுபக்கப் பின்பக்க டயரில் காற்று இறங்கியதால் சாரதிக்கு காரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கஹத்துடுவ வெத்தர வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீதும் வீதியில் பயணித்த மாணவர் மீதும் மோதியதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் 15 வயதுடைய மாணவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக  வெத்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த விபத்து விபத்து தொடர்பில் 29 வயதான காரின் சாரதி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கஹத்துடுவ பகுதியில் கோர விபத்து. பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை. கஹத்துடுவ வெத்தர வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மாணவன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிலியந்தலை திசையிலிருந்து கஹத்துடுவ திசை நோக்கிச் சென்ற காரின் வலதுபக்கப் பின்பக்க டயரில் காற்று இறங்கியதால் சாரதிக்கு காரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கஹத்துடுவ வெத்தர வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீதும் வீதியில் பயணித்த மாணவர் மீதும் மோதியதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் 15 வயதுடைய மாணவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக  வெத்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதேவேளை குறித்த விபத்து விபத்து தொடர்பில் 29 வயதான காரின் சாரதி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement