• Nov 23 2024

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு..!

Chithra / Mar 7th 2024, 9:17 am
image

 

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியை தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அதாவது வெப்பம், அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு.  இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியை தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இதேவேளை வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, இன்று குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்ப சுட்டெண் அதாவது வெப்பம், அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement