• Sep 20 2024

இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலம் குவிந்த பெருந்தொகை டொலர்கள்!

Chithra / Jan 15th 2023, 8:05 am
image

Advertisement

கடந்த வருடம் இலங்கையின் சுற்றுலா வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 124.2 வீத வளர்ச்சியாகும்.

2022 இல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 719.978 ஆகும். இது முந்தைய ஆண்டில் வந்த 194,495 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் 270.2 சதவீத வளர்ச்சியாகும்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 91.961 ஆக மிக உயர்ந்த வளர்ச்சியைக் காட்டியது.


அதன்படி. ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னர். டிசம்பர் மாதமே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவு. மார்ச் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதற்கு முந்தைய வருடத்தில் அந்த எண்ணிக்கை 106.500 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கிறது.

தரவுகளின்படி கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். மேலும் 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 123.004 இந்திய சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 17 சதவீதமாகும்.

இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலம் குவிந்த பெருந்தொகை டொலர்கள் கடந்த வருடம் இலங்கையின் சுற்றுலா வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 124.2 வீத வளர்ச்சியாகும்.2022 இல் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 719.978 ஆகும். இது முந்தைய ஆண்டில் வந்த 194,495 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் 270.2 சதவீத வளர்ச்சியாகும்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 91.961 ஆக மிக உயர்ந்த வளர்ச்சியைக் காட்டியது.அதன்படி. ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் பின்னர். டிசம்பர் மாதமே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவு. மார்ச் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதற்கு முந்தைய வருடத்தில் அந்த எண்ணிக்கை 106.500 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கிறது.தரவுகளின்படி கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். மேலும் 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 123.004 இந்திய சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 17 சதவீதமாகும்.

Advertisement

Advertisement

Advertisement