• Jul 07 2024

சாய்ந்தமருது கடற்பகுதியில் இயந்திரமின்றி பாரிய படகு மீட்பு..!

Chithra / Feb 11th 2024, 10:56 am
image

Advertisement


சாய்ந்தமருது கடற்பகுதியில் இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று   மீட்கப்பட்டு கரைக்கு இன்று இழுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.

எஞ்சிய   படகு  பகுதிகள்  கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுக்கப்பட்டது. 

குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர், படகு உடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதை  இனங்கண்டு  ஏனையோருக்கு   தகவல் வழங்கியதை  தொடர்ந்து,

குறித்த பகுதிக்கு சென்ற  பொதுமக்கள் குழுவினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.

மேலும் உடைந்த   படகு  கல்முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.

இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெறுவதுடன், படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்கு துறையின்றி மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


சாய்ந்தமருது கடற்பகுதியில் இயந்திரமின்றி பாரிய படகு மீட்பு. சாய்ந்தமருது கடற்பகுதியில் இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று   மீட்கப்பட்டு கரைக்கு இன்று இழுத்து வரப்பட்டுள்ளது.குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.எஞ்சிய   படகு  பகுதிகள்  கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுக்கப்பட்டது. குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர், படகு உடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதை  இனங்கண்டு  ஏனையோருக்கு   தகவல் வழங்கியதை  தொடர்ந்து,குறித்த பகுதிக்கு சென்ற  பொதுமக்கள் குழுவினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.மேலும் உடைந்த   படகு  கல்முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெறுவதுடன், படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்கு துறையின்றி மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement